/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயணிகள் வெயில் மழைக்கு இடையூறு இல்லாமல் தங்கிச் செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
/
பயணிகள் வெயில் மழைக்கு இடையூறு இல்லாமல் தங்கிச் செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
பயணிகள் வெயில் மழைக்கு இடையூறு இல்லாமல் தங்கிச் செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
பயணிகள் வெயில் மழைக்கு இடையூறு இல்லாமல் தங்கிச் செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ADDED : ஏப் 20, 2024 05:21 AM

மாவட்டத்தில் விவசாய, தொழில், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இப்பேரூராட்சி பகுதியில் இருந்து தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து மூலமாக வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். சிங்கம்புணரி பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு 1995 ல் விரிவுபடுத்தப்பட்டது.
அதற்குப் பிறகு பஸ் நிலையத்திற்குள் வணிக நோக்கில் கடைகள் கட்டும் பணி தொடர்ந்து நடந்ததே தவிர, பயணிகளுக்கு பயன்படும் வகையில் உருப்படியான எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
பஸ் நிலையத்துக்குள் மட்டும் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் பயணிகள் அமர சில சதுரடி பரப்பு கொண்ட இடமும், சில இருக்கைகளுமே அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து கடைக்காரர்களும் பல அடி துாரத்திற்கு பஸ் ஸ்டாண்ட் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். சிலர் தங்கள் கடைக்கு முன்பாக பயணிகளை நிற்க விடாமல் துரத்தி விடுகின்றனர். மேலும் பஸ் வெளியேறும் நுழைவு வாயிலில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.
பயணிகள் தங்குவதற்கு கட்டப்பட்ட இடத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக மழைக்காலங்களில் பயணிகள் நனைய வேண்டி உள்ளது.
வெயில் காலங்களில் ஒதுங்க நிழல் இல்லாத நிலையும் உள்ளது. பஸ்கள் சீரான வரிசையில் நின்று செல்ல வசதி இல்லாததால் மாணவர்களும் பயணிகளும் ஆபத்தான முறையில் மழை, வெயிலில் ஓட்டம் பிடித்து பஸ் ஏற வேண்டிய சூழல் உள்ளது.
எனவே பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகள் வெயில் மழைக்கு இடையூறு இல்லாமல் தங்கிச் செல்ல வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

