/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லலில் கிடப்பில் பஸ் ஸ்டாண்ட் கோடையில் தகிக்கும் பயணிகள்
/
கல்லலில் கிடப்பில் பஸ் ஸ்டாண்ட் கோடையில் தகிக்கும் பயணிகள்
கல்லலில் கிடப்பில் பஸ் ஸ்டாண்ட் கோடையில் தகிக்கும் பயணிகள்
கல்லலில் கிடப்பில் பஸ் ஸ்டாண்ட் கோடையில் தகிக்கும் பயணிகள்
ADDED : ஏப் 29, 2024 05:29 AM

காரைக்குடி: கல்லலில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி, பயணிகள் கோடை வெயில் உஷ்ணத்தில் நிற்க இடமின்றி தகித்து வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர் கல்லல். இந்நகரை சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைக்காக இங்கு வந்து செல்கின்றனர். இங்கு இது வரை ஊராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரப்படவில்லை. பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு போதிய இருக்கை, நிழற்குடை வசதிகள் இல்லை. இதனால், கோடை வெயில் தாக்கத்தில் பயணிகள் தகித்து வருகின்றனர்.
ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலின் போது இங்கு பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரப்படும் என உறுதி அளித்தனர்.
ஆனால் இதுவரை கட்டித்தரப்படவில்லை. தொடர்ந்து இங்கு பஸ் ஸ்டாண்ட், தனி தாலுகா அந்தஸ்து, வாரச்சந்தை கோரிக்கை வைத்து வருகிறோம்.