/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்களால் பயணிகள் அவதி
/
மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்களால் பயணிகள் அவதி
மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்களால் பயணிகள் அவதி
மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்களால் பயணிகள் அவதி
ADDED : ஏப் 29, 2024 05:25 AM
மானாமதுரை: மானாமதுரை பைபாஸ் பஸ் ஸ்டாப்பில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை நகரம் அமைந்துள்ளது.இந்நிலையில் மானாமதுரை கீழ்கரை பகுதி மக்கள் அண்ணாத்துரை சிலை பஸ் ஸ்டாப்பை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4வழி சாலை திட்டம் துவங்கப்பட்டதை தொடர்ந்து அண்ணாத்துரை சிலை பஸ் ஸ்டாப் செயல்படாமல் போனதையடுத்து கீழ்கரை பகுதி மக்கள் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி தங்கள் பகுதிகளுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே புதிதாக பஸ் ஸ்டாப் ஏற்படுத்தப்பட்ட நிலையில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பஸ்களும், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பஸ்களும் இந்த பஸ் ஸ்டாப்பில் நின்று சென்றதால் கீழ்கரை பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பஸ் ஸ்டாப்பில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்காமல் செல்வதினால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

