ADDED : ஜூன் 29, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் இருந்து செல்லும் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் பைப் ஹாரனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் வந்தது.
நேற்று காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் மோட்டார் வாகன அலுவலர், போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர். 10க்கும் மேற்பட்ட பஸ்களில் பைப் ஹாரன் அகற்றப்பட்டதோடு பஸ்சிற்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பைப் ஹாரனை பயன்படுத்தினால் தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

