/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலிதீன் விற்பனை வியாபாரிகளுக்கு அபராதம்
/
பாலிதீன் விற்பனை வியாபாரிகளுக்கு அபராதம்
ADDED : ஆக 12, 2024 03:45 AM
திருப்புத்தூர் : திருப்புத்தூரில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை விற்பனை செய்ததாக வியாபாரிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
இங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் மீண்டும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்பாடு அதிகரித்து விட்டன. இதை கட்டுப்படுத்த நேற்று பேரூராட்சி சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி தலைமையில், துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில், விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 12 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர்.
ஒன்பது கடைகளுக்கு ரூ.8,500 வரை அபராதம் விதித்தனர். கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை விற்பனை செய்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்தனர்.