ADDED : ஆக 19, 2024 12:32 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. வட்டக்கிளை தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். சங்க செயலாளர் பாண்டி, பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் ஆண்டு அறிக்கை வாசித்தனர். மாவட்ட தலைவர் செல்லமுத்து, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் மெய்யப்பன், பள்ளி, கல்லுாரி ஓய்வு ஆசிரியர் நல சங்க பொறுப்பாளர் முத்துச்சாமி, துணை தலைவர் விஸ்வநாதன், இணை செயலாளர் லோகநாதன், மாவட்ட செயற்குழு சிவராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

