/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உடல் தானம் வழங்க 39 பேர் விருப்ப மனு
/
உடல் தானம் வழங்க 39 பேர் விருப்ப மனு
ADDED : செப் 23, 2025 04:14 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் உடல் தானம் வழங்க 39 பேர் விருப்ப மனு வழங்கினர்.
சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை படிப்பிற்காக உடல் தானமாகப் பெறப்படு கின்றன. மாணவர்கள் மனித உடலின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடியும்.
அரசு மருத்துவமனையில் 2015ம் ஆண்டிற்கு பின் தற்போது வரை 25 பேர் உடல்களை தானமாக வழங்கியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் 39 பேர் முதற்கட்டமாக மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் உடல் தானத்திற்கான விருப்ப மனுவை கல்லுாரி முதல்வர் சீனிவாசனிடம் வழங்கினர்.
டாக்டர்கள் சிவக் குமார், முகமதுரபி, தென்றல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.