/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாசனத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு: கால்வாய்கள் துார்வாரப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பாசனத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு: கால்வாய்கள் துார்வாரப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாசனத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு: கால்வாய்கள் துார்வாரப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாசனத்திற்கு வைகையில் தண்ணீர் திறப்பு: கால்வாய்கள் துார்வாரப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : செப் 23, 2025 09:49 AM
ADDED : செப் 23, 2025 04:15 AM

மானாமதுரை: இளையான்குடியில் நெல் பருத்தி, வாழை, குண்டு மிளகாய், கரும்பு உள்ளிட்ட விவ சாயம் செய்யப்படுகிறது.
வைகை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வரும் நிலையில் மானாமதுரையில் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் 87க்கும் மேற்பட்ட கண்மாய்களும், இளையான்குடியில் இடது பிரதான கால்வாய் மூலம் 33க்கும் மேற்பட்ட கண்மாய்களும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது போதுமான மழை இல்லாத காரணத்தினால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில் தற்போது சிவகங்கை மாவட்ட பெரியாறு கால்வாய் பகுதி களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விரைவில் வைகை பூர்வீக பாசன பகுதி களுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் தற்போது மானாமதுரை நகர்ப்பகுதியில் வைகை ஆற்றில் கருவேல மரங்களும், நாணல் செடிகளும் வளர்ந்துள்ளது. கண்மாய் களுக்கு செல்லும் கால்வாய்களும் துார் வாரப்படாமல் இருப்பதால் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டாலும் சீராக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற் பட்டுள்ளதாக விவ சாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கூறிய தாவது:
மானாமதுரை, இளையான்குடியில் ஆடிப் பட்டத்தின் போது போதிய மழை பெய்யாத காரணத்தினால் தாமதமாகவே விவசாய பணிகளை துவக்கியுள்ளோம். தற்போது மழை தொடர்ந்து பெய்யாததால் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டாலும் சீராக,வேகமாக வருவதற்கு தடையாக வைகை ஆற்றில் கருவேல மரங்களும், நாணல் செடிகளும் வளர்ந்துள்ளது.
அதேபோன்று கால்வாய்களும் தூர்வாரப் படாமல் மேடு பள்ளமாக உள்ளது. நகர் பகுதிகளில் செல்லும் கால்வாய்களில் அதிகளவில் ஆக்கிரமிப்பு உள்ளதால் கால்வாயின் அகலம் சுருங்கி விட்டது. ஆங்காங்கே கழிவு நீரை விடுவதாலும் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
ஆகவே பொதுப் பணித்துறை,நீர்வளத் துறை அதிகாரிகள் உட னடியாக வைகை ஆற்றையும், கால்வாய்களையும் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அழகுராஜா கூறியதாவது:
மானாமதுரையில் உள்ள கால்வாய்கள் கடந்த வருடம் துார்வாரி சுத்தம் செய்யப்பட்ட நிலையில் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக அனைத்து கால்வாய் களையும் மீண்டும் துார்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.