/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சமுதாயக்கூடம் இல்லாமல் தவிக்கும் கோபாலபுரம் மக்கள்
/
சமுதாயக்கூடம் இல்லாமல் தவிக்கும் கோபாலபுரம் மக்கள்
சமுதாயக்கூடம் இல்லாமல் தவிக்கும் கோபாலபுரம் மக்கள்
சமுதாயக்கூடம் இல்லாமல் தவிக்கும் கோபாலபுரம் மக்கள்
ADDED : ஜூலை 13, 2024 07:28 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியத்தில் பிரான்மலை ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. சில வருடங்களில் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை உள்ளதால் அதை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது.
கிராம மக்கள் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த பொதுவான சமுதாயக்கூடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். பிரான்மலையில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் கிராமம் இருப்பதால் பிரான்மலையிலும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவதில்லை. எனவே தங்கள் கிராமத்தில் இருக்கும் பழைய சமுதாயக்கூட கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.