/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் மின்தடையால் தவிக்கும் எஸ்.புதுார் மக்கள்
/
தொடர் மின்தடையால் தவிக்கும் எஸ்.புதுார் மக்கள்
ADDED : மே 09, 2024 05:27 AM
எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்து அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மின்தடை செய்வதற்கு பதிலாக பல்வேறு கிராமங்களில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனால் ஊராட்சிகளில் தொட்டிகளில் குடிநீர் ஏற்ற முடியாமலும், விவசாயிகள் பம்பு செட்களை இயக்க முடியாமலும் அவதிப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மின்சாரத்தை நிறுத்தி பகிர்ந்து விநியோகிக்கின்றனர். இதனால் ஒன்றியம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கோடை வெயில் மக்களை வாட்டும் நேரத்தில் இரவு பகல் என அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.