/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்
/
ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்
ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்
ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்
ADDED : செப் 12, 2024 04:51 AM

காரைக்குடி: காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் ஆதார் கர்டை புதுப்பிக்க வந்திருந்தனர்.
ஆதார் கார்டு தற்போது வங்கி கணக்கு தொடங்குவது முதல் டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, விவசாய பதிவு, பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து தேவைக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது.
தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், செப். 14ம் தேதி கடைசி தேதி என்றும் தகவல் பரப்பப்படுகிறது. நேற்று காலை காரைக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு ஏராளமான மக்கள் வந்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.
தாசில்தார் ராஜா கூறுகையில்: ஆதார் கார்டை புதுப்பிக்க கடைசி தேதி என்று எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் வரவில்லை. வதந்தி காரணமாகவும் மக்கள் கூடி விடுகின்றனர்.