/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் குடிநீர் கேட்டு பகைவரை வென்றான் மக்கள் மறியல்
/
இளையான்குடியில் குடிநீர் கேட்டு பகைவரை வென்றான் மக்கள் மறியல்
இளையான்குடியில் குடிநீர் கேட்டு பகைவரை வென்றான் மக்கள் மறியல்
இளையான்குடியில் குடிநீர் கேட்டு பகைவரை வென்றான் மக்கள் மறியல்
ADDED : மார் 06, 2025 05:14 AM

இளையான்குடி: இளையான்குடியில் குடிநீர் வழங்க கோரி பகைவரை வென்றான் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகைவரை வென்றான் கிராம மக்கள் இப்பகுதி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் வால்வுகளில் கசியும் நீரை பிடித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த வால்வுகளை காவிரி கூட்டு குடிநீர் திட்ட ஊழியர்கள் வேறு பகுதிக்கு மாற்றியதை தொடர்ந்து அப்பகுதியில் தண்ணீர் வராமல் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர்.
இளையான்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு புதிதாக தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் போதுமான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பகைவரை வென்றான் கிராம மக்கள் நேற்று காலை கண்மாய்க்கரை அருகே பரமக்குடி ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போதுமான குடிநீர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.