/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய பெருமாள் நாட்டரசன்கோட்டையில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்

ADDED : ஏப் 23, 2024 11:47 PM

சிவகங்கை- நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வெள்ளி குதிரையில் வெண்பட்டு உடுத்தி பெருமாள் ஆற்றில் இறங்கினார்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஏப்., 5 ம் தேதி சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏப்.22 அன்று காலை 9:35 மணிக்கு திருமஞ்சனம், காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளினார்.
நேற்று காலை வெள்ளி குதிரை வாகனத்தில் வெண்பட்டு உடுத்தி பெருமாள் புறப்பாடாகி, நாட்டரசன்கோட்டை விலக்கு அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து ஊர்வலமாக வந்து நேற்று காலை 8:15 முதல் 9:00 மணிக்குள் ஆற்றில் இறங்கினார்.
அன்று மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், பத்தி உலாத்துதல், இரவு 8:00 மணிக்கு பொட்டலில் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை (ஏப்., 24) 6:30 மணிக்கு வெள்ளி கேடயத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறும். காலை 11:30 மணிக்கு மாணிக்கவள்ளி விநாயகர் கோயிலில் திருமஞ்சனம், தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இன்று மாலை 6:00 மணிக்கு கருட சேவை புறப்பாடு நடைபெறும்.
விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.