/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விடுதி நிதி முறைகேடு நடவடிக்கைக்கு மனு
/
விடுதி நிதி முறைகேடு நடவடிக்கைக்கு மனு
ADDED : ஆக 29, 2024 05:13 AM
சிவகங்கை: ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர்களுக்கு அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த தாசில்தார், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பறையர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
ஆதிதிராவிடர் விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் நிதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய சில தாசில்தார், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று பறையர் சங்க மாநில தலைவர் சக்திவேல் தலைமையில், சிவகங்கை ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் அறிவித்தனர். நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த அவர்கள், கலெக்டர் இல்லாததால் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவனிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.