/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்தனேந்தலில் நெற்பயிரை சேதமாக்கும் பன்றிகள்; விடிய,விடிய காவல் காக்கும் விவசாயிகள்

ADDED : ஜூன் 27, 2024 11:34 PM

மானாமதுரை : மானாமதுரை அருகே முத்தனேந்தல், ராஜகம்பீரம், கிருங்காக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வயல்களில் விடிய,விடிய கண்விழித்து பட்டாசுகளை வெடித்து பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மானாமதுரை அருகே முத்தனேந்தல், ராஜ கம்பீரம், கிருங்காக்கோட்டை, கால்பிரவு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர்.
தற்போது நெற்பயிர்களில் பால் பிடித்துள்ள நிலையில் காட்டுப்பகுதிகளிலிருந்து வரும் பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இரவு நேரங்களில் வயல்களில் விடிய,விடிய கண்விழித்து பட்டாசுகளை கொளுத்தி போட்டு பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருங்காக்கோட்டை விவசாயி காசிராஜன் கூறியதாவது: வயல்களில் விடிய,விடிய கண்விழித்து பட்டாசுகளை போட்டாலும் பன்றிகள் அங்கிருந்து செல்லாமல் நெற்பயிர்களை முழுமையாக சேதப்படுத்தி வருகிறது.
ஆகவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறை அதிகாரிகளும் இப்பகுதியிலிருந்து பன்றிகளை விரட்டியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.