/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
யாத்திரை செல்பவருக்கு சிங்கம்புணரியில் வரவேற்பு
/
யாத்திரை செல்பவருக்கு சிங்கம்புணரியில் வரவேற்பு
ADDED : செப் 17, 2024 05:53 AM

சிங்கம்புணரி, : உ.பி., மாநிலம் பதேபூர் பகுதியை சேர்ந்தவர் சிவ்சேவக் சிவ்கரன். இவர் தேச நலனுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
2022ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி யாத்திரையை துவக்கிய இவர் ராஜஸ்தான், காஷ்மீர், பஞ்சாப், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக தமிழகம் வந்தார்.
பல்வேறு மாவட்டங்களை கடந்து நேற்று சிங்கம்புணரி வந்தார். அவருக்கு பா.ஜ., இந்து முன்னணி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி சென்று யாத்திரையை நிறைவு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.