/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி தீவிரம்

ADDED : மார் 11, 2025 05:06 AM

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் 2வது திட்டத்தின் கீழ் குழாய்கள்பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்சி முத்தரசநல்லுார் பகுதி காவிரி ஆற்றில்இருந்து ராமநாதபுரம் வரை 15 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க., ஆட்சியின் போது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
2வது கட்டமாக கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சி பகுதியில் துவங்கி ராமேஸ்வரம் வரை காவிரி குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்காக ஆங்காங்கே குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் விடுபட்டுப் போன பேரூராட்சி மற்றும் நகராட்சி,கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் குடிநீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அனைத்து பகுதிகளிலும் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.