/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் உழவார பணி; 150 அடியார்கள் பங்கேற்பு
/
சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் உழவார பணி; 150 அடியார்கள் பங்கேற்பு
சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் உழவார பணி; 150 அடியார்கள் பங்கேற்பு
சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் உழவார பணி; 150 அடியார்கள் பங்கேற்பு
ADDED : மே 06, 2024 12:11 AM
சிவகங்கை : காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் 150 அடியார்கள் உழவார பணிகளை மேற்கொண்டனர்.
சேலம், பொன்னம்மாபேட்டை திருஅருணை உழவார திருக்கூட்டம் சார்பில், 150 அடியார்கள் நேற்று காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் வளாகத்தில் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர். இவர்களிடம் உள்ள மின் மோட்டார்கள் மூலம் கோயில் வளாகத்தில் எண்ணெய் படிந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர்.
கோயிலில் பயன்படுத்தும் விளக்கு, பூஜை பாத்திரங்களை பாலீஷ் செய்து கொடுத்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் தேவையின்றி வளர்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தியதோடு, அங்கு தேங்கியிருந்த குப்பைகளை அகற்றினர்.
கோயில் துாண்கள் உட்பட வளாகத்தில் உள்ள பழங்கால சிலைகளை சுத்தம் செய்து கொடுத்தனர். உழவார பணிகளை நிர்வாகி ஜெயக்குமார் தலைமையில் 150 அடியார்கள் மேற்கொண்டனர். கோயில் கண்காணிப்பாளர் பாலசரவணன் ஏற்பாடுகளை செய்தார்.