/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் அலுவலர் மீது போலீசார் வழக்கு
/
கோயில் அலுவலர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஏப் 14, 2024 11:04 PM
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலராக இருந்த வில்வமூர்த்தி மீது கோயில் நிதியை முறைகேடாக மாற்றம் செய்ததாக கூறி திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி உண்டியல் காணிக்கை பணம், நகை எண்ணும் போது அப்போதைய செயல் அலுவலர் வில்வ மூர்த்தி இரண்டு தங்க கொலுசுகளை எடுத்துக் கொண்டார்.
சி.சி.டி.வி., மூலம் கண்டறியப்பட்டு அவர் மீது போலீசில் புகார் செய்த பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மடப்புரம் கோயில் நிதி நாற்பது லட்ச ரூபாயை ராமநாதபுரம் மாவட்டம் சண்டிலான் கிராமத்தில் உள்ள முனியப்பசாமி கோயிலுக்கு மாற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் வில்வமூர்த்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தி முருகலிங்கம் என்பவரது பெயருக்கு மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தணிக்கையின் போது கண்டறியப்பட்டு தற்போதைய உதவி ஆணையர் ஞானசேகரன் திருப்புவனம் போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வில்வமூர்த்தி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

