/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவிலில் ரூ. பல லட்சம் மரங்கள் வெட்டி கடத்தல் வருவாய், போலீஸ் விசாரணை
/
காளையார்கோவிலில் ரூ. பல லட்சம் மரங்கள் வெட்டி கடத்தல் வருவாய், போலீஸ் விசாரணை
காளையார்கோவிலில் ரூ. பல லட்சம் மரங்கள் வெட்டி கடத்தல் வருவாய், போலீஸ் விசாரணை
காளையார்கோவிலில் ரூ. பல லட்சம் மரங்கள் வெட்டி கடத்தல் வருவாய், போலீஸ் விசாரணை
ADDED : பிப் 24, 2025 04:41 AM

சிவகங்கை: காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டையில் அனுமதியின்றி 3 மரங்களை வெட்டியதாக வருவாய், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டையில் மதுரை -- தொண்டி ரோட்டின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வேப்ப, வேலா, புளிய மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வாகன ஓட்டிகள் நிழலில் இளைப்பாறி செல்லும் நோக்கில் இப்பழமையான மரங்களை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியநரிக்கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், மனையிடம் அமைத்து வீட்டுமனைகளாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த மனைகளுக்கு ரோட்டில் இருந்து பாதை காட்ட வேண்டிய கட்டாயம் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், வருவாய்துறை அனுமதியின்றி பிப்., 22 அன்று இரவு ரூ.பல லட்சம் மதிப்புள்ள 1 வேப்ப மரம், 2 வேலா மரங்களை வெட்டி, டிராக்டரில் கடத்தி சென்றனர்.
இது குறித்து அறிந்த கொல்லங்குடி வி.ஏ.ஓ., தினேஷ், காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். தாசில்தார் முபாரக் உசேன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருவாய், போலீஸ் விசாரணை
இது குறித்து வருவாய்துறையினர் கூறியதாவது, ரியல் எஸ்டேட்டிற்காக இடத்தை வாங்கும் போது பாதை இருப்பது போல் காண்பித்து பிளான் அப்ரூவல் வாங்கிவிட்டனர்.
ஆனால், இடத்தை வாங்கிய பின்னர் தான் பிளாட்டிற்கு பாதை இல்லை என தெரிந்தது.
இந்த பாதை அமைப்பதற்காக அனுமதியின்றி ரோட்டோர மரங்களை அகற்றிவிட்டனர். அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும், போலீஸ் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்துள்ளோம், என்றனர்.

