ADDED : மே 29, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை நகர், தில்லை நகர், உடப்பன்பட்டி உட்பட சுற்று பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்.
திருட்டுக்கள் தொடர்பாக தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அந்த வாலிபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வீட்டில் இருந்து சி.சி.டிவி கேமராவில் பதிவான நபரின் போட்டோவை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் வாலிபர் போட்டோவை வெளியிட்டு தகவல் தெரிந்தால் தேவகோட்டை இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கு தகவல் தெரிவிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் இருவரின் அலைபேசி எண்ணை குறிப்பிட்டுள்ளனர். இத்தகவல் வாட்ஸ் ஆப் மூலம் பரவி வருகிறது.