/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வியாபாரியிடம் நெல்லை பெற்று ரூ.28.42 லட்சம் தராமல் மோசடி
/
வியாபாரியிடம் நெல்லை பெற்று ரூ.28.42 லட்சம் தராமல் மோசடி
வியாபாரியிடம் நெல்லை பெற்று ரூ.28.42 லட்சம் தராமல் மோசடி
வியாபாரியிடம் நெல்லை பெற்று ரூ.28.42 லட்சம் தராமல் மோசடி
UPDATED : மார் 08, 2025 07:16 AM
ADDED : மார் 08, 2025 05:20 AM
வியாபாரியிடம் நெல்லை பெற்றுரூ.28.42 லட்சம் தராமல் மோசடி
புரோக்கர்கள் மீது வழக்கு
சிவகங்கை:
தென்காசி மாவட்டம் சொக்கலிங்கபுரம் பனையூர் காலனி நெல் வியாபாரி ராமர் 77. இவர், நெல் விற்கும் ஏஜன்ட்களாக உள்ள காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம்நகர் ஆறுமுகம் மகன் குமார் 42, பள்ளத்துார் முத்து மகன் துரை மாணிக்கம் ஆகியோரிடம் 2024 ஜூலை 5 முதல் செப்., 13 ம் தேதி வரை ரூ.58 லட்சத்து 42 ஆயிரத்து 210 க்கு நெல் மூடைகளை விற்பனை செய்துள்ளார். இந்த தொகையில் ரூ.30 லட்சத்தை மட்டுமே இருவரும் ராமரிடம் கொடுத்துள்ளனர். எஞ்சிய ரூ.28 லட்சத்து 42 ஆயிரத்து 210 யை தராமல் இருந்தனர். அவர் பள்ளத்துார் போலீசில் புகார் அளிக்க செல்வதாக கூறிய போது, பணத்தை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி அவர் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் இதே போன்று அவர்கள் இருவரும் சாக்கோட்டையில் உள்ள வியாபாரிகளிடம் நெல்லை வாங்கி பணத்தை தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்ததின் பேரில், போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர். இத்தகவல் குறித்து அறிந்த வியாபாரி ராமர், தனக்கும் பணத்தை தராமல் மிரட்டுவதாக பள்ளத்துார் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரி, நெல் புரோக்கர்கள் குமார், துரைமாணிக்கம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்துள்ளார். // கஞ்சா விற்ற இருவர் கைது சிவகங்கை: பூவந்தி எஸ்.ஐ., சந்தனக்கருப்பு மார்ச் 6 ம் தேதி 9:00 மணிக்கு ரோந்து சென்றார். அப்போது பூவந்தி சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற எஸ்.ஐ.,சந்தனக்கருப்பு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்புவனம் புதுார் பஜனை மடத்தெரு பாலமுருகன் மகன் சாந்தபிரியன் 22, தொண்டி தன்னமாக்குடி தாகூர் கனி மகன் வினோத் பாண்டி 27 ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 115 கிராம் கஞ்சா, டூவீலர், ரூ.37 ஆயிரத்தை பறிமுதல் செய்தார். //