ரோட்டில் விழுந்தவர் பலி
நாச்சியாபுரம்: காரைக்குடி அருகே நெசவாளர் காலனி சுப்பையா மகன் கார்த்திகேயன் 39. ஜூன் 27 அதிகாலை 12:30 மணிக்கு மது அருந்திய நிலையில் ரோட்டில் விழுந்துள்ளார். அதில், அவரது காது, மூக்கில் ரத்தம் வந்தநிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாச்சியாபுரம் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரிக்கிறார்.
பஸ் கண்ணாடி உடைப்பு இருவர் கைது
திருப்பாச்சேத்தி: மானாமதுரை அருகே உருளி கருப்புச்சாமி மகன் முத்துராஜா 20, சிவகங்கை வந்தவாசி மச்சக்காளை மகன் வெங்கடேஷ் 20, உதராபுளி அருண்குமார் 28. மூவரும் ஜூன் 26 அன்று இரவு 10:30 மணிக்கு, செம்புராயனேந்தல் அருகே குவளைவேலி பாலத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பஸ்சை வழிமறித்தனர். பஸ் டிரைவர் மதுரை, உசிலம்பட்டி அருகே சிம்மநத்தம் தர்மர் மகன் வடிவேலு 47, பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதில் அதிருப்தியான மூவரும் கல்லால் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். டிரைவர் புகாரின்படி திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் அருண்குமார், மூவர் மீதும் வழக்கு பதிந்து வெங்கடேஷ், அருண்குமார் இருவரையும் கைது செய்தார்.
தடைமீறி வண்டி பந்தயம்5 பேர் மீது வழக்கு
கல்லல்: குருந்தம்பட்டு - வேப்பங்குளம் ரோட்டில் ஜூன் 27 அன்று காலை 7:00 மணிக்கு அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியுள்ளனர். குருந்தம்பட்டு வி.ஏ.ஓ., ராஜகோபால் புகாரின்படி அக்கிராமத்தை சேர்ந்த குணசேகரன் 52 உட்பட 5 பேர் மீது கல்லல் எஸ்.ஐ., ஜெயபாலன் வழக்கு பதிந்தார்.
தடை மீறி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு
மானாமதுரை: ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் திடலில், அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியுள்ளனர். புளியங்குளம் வி.ஏ.ஓ., வினோத்குமார் புகாரின்படி, மானாமதுரை எஸ்.ஐ., பாலசதீஷ் கண்ணன் மஞ்சுவிரட்டு நடத்திய விளாக்குளம் மூக்கையா மகன் செல்வம் 47 உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்தார்.

