/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீஸ்காரர்- தி.மு.க., பிரமுகர் சிவகங்கையில் நடுரோட்டில் அடிதடி
/
போலீஸ்காரர்- தி.மு.க., பிரமுகர் சிவகங்கையில் நடுரோட்டில் அடிதடி
போலீஸ்காரர்- தி.மு.க., பிரமுகர் சிவகங்கையில் நடுரோட்டில் அடிதடி
போலீஸ்காரர்- தி.மு.க., பிரமுகர் சிவகங்கையில் நடுரோட்டில் அடிதடி
ADDED : மார் 03, 2025 06:47 AM

சிவகங்கை; சிவகங்கையில் கார் நிறுத்துவது தொடர்பாக நடுரோட்டில் போலீஸ்காரர் பிரபு மற்றும் கோயில் பூஜாரி, தி.மு.க., பிரமுகர் இடையே அடிதடி நடந்தது.
சிவகங்கை ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபு 43. இவர் மார்ச் 1 ல் குடும்பத்தினருடன் காரில் வெளியூர் சென்றுவிட்டு சிவகங்கைக்கு வந்தார். இங்கு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டல் முன் சாப்பிட காரை நிறுத்தியுள்ளார். அப்போது சிவகங்கை பிள்ளைவயல் காளி கோயில் பூஜாரி சங்கு மணிகண்டன், தி.மு.க., பிரமுகர் சரவணன் ஆகியோர் சேர்ந்து மற்றொரு காரில் அங்கு வந்தனர். காரை நிறுத்துவதில் போலீஸ் தரப்பிற்கும், பூஜாரி மற்றும் தி.மு.க., பிரமுகர் தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அங்கு நடுரோட்டில் இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். எஸ்.ஐ., சஜீவ் தலைமையிலான போலீசார் அடிதடியை விலக்கிவிட்டு விசாரிக்கின்றனர்.