/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நுாறு நாள் வேலையில் குளம் வெட்ட திட்டம்
/
நுாறு நாள் வேலையில் குளம் வெட்ட திட்டம்
ADDED : ஜூலை 05, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியத்தில் நுாறுநாள் வேலைக்கு உறுதி திட்டத்தில் புதிய குளங்கள் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு புறம்போக்குகளில் குளம் வெட்ட ஆலோசிக்கப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம் வருவாய் ஆவணங்களில் குளம் எனக் குறிப்பிடப்பட்டு குளமாக வெட்டப்படாமல் மேடாக உள்ள பகுதிகளிலும் குளம் வெட்ட தேர்வு செய்ய ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கண்டறியப்பட்ட இடத்தின் ஆவணம், புகைப்படத்துடன் உதவி பொறியாளர் சான்று பெற்று குளம் அமைக்க நிர்வாக அனுமதி பெற ஏ.பி.டி.ஓ.க்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.