/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ரத்தின வேலுக்கு பூஜை
/
தேவகோட்டையில் ரத்தின வேலுக்கு பூஜை
ADDED : ஜூன் 04, 2024 05:36 AM

தேவகோட்டை : தேவகோட்டையில் ரத்தின கற்கள் பொருத்திய வேல் குன்றக்குடியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தினவேலை பையில் இருந்து வெளியே எடுத்தால் 18 மூடை அரிசியில் உணவு சமையல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது ஐதீகம். இந்த வேல் தைப்பூசத்திற்கு பழநிக்கும், மாசிமகத்திற்கு தேவகோட்டை நகர பள்ளிக்கும் இரண்டாண்டுக்கு ஒரு முறை தி.ராம.சாமி. கோவிலுக்கும் மட்டுமே வரும்.
வைகாசி விழாவிற்கு நேற்று அதிகாலை தேவகோட்டை தி.ராம. சாமி கோவிலுக்கு வேல் கொண்டு வரப்பட்டது. முன்னதாக நகர் பள்ளிக்கூடத்தில் இருந்த கைலாசவிநாயகர் கோயிலிலும் பூஜை முடித்து முன்னாள் வங்கி மேலாளர் காசிநாதன் ஊர்வலமாக எடுத்து வந்தார்.
பக்தர்கள் வேலிற்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். வேல் தி.ராம.சாமி.கோவிலில் அலங்கரிக்கப்பட்ட முருகன் கரங்களில் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தன.தொடர்ந்து 18 மூடை அரிசியில் சமைக்கப்பட்ட உணவை வைத்து வேலிற்கு மகேஸ்வர பூஜை நடந்தது.