/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துணை ராணுவம் வராததால் அணிவகுப்பு ஒத்திவைப்பு
/
துணை ராணுவம் வராததால் அணிவகுப்பு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 04, 2024 04:14 AM
காரைக்குடி : தமிழக முழுவதும் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி ஓட்டு போடுவதற்கும், எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் துணை ராணுவப் படையினர் அனுப்பப்படுவது வழக்கம். துணை ராணுவப் படையினர் வருகையை ஒட்டி துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும். இவர்களுடன் போலீசாரும் கலந்து கொள்வர்.
நேற்று அணிவகுப்பு பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து தொடங்கி தேவர் சிலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாலை 4:30க்கு அணிவகுப்பு தொடங்கும் என்ற அறிவிப்பின்படி போலீசார் சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் பழைய பஸ் ஸ்டாண்டில் 4 மணி முதலே வரத் தொடங்கினர்.
மாலை 5:30 மணிக்கு மேல் ஆகியும் துணை ராணுவத்தினர் வந்து சேராததால் அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

