/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் மரங்களால் மின்விநியோகம் பாதிப்பு
/
சாக்கோட்டையில் மரங்களால் மின்விநியோகம் பாதிப்பு
ADDED : ஏப் 17, 2024 06:12 AM
காரைக்குடி : சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்கம்பங்களை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 26 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
கிராமங்களுக்கு செல்லும் மின்கம்பம் அருகில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. கண்மாய் மற்றும் சாலை ஓரங்களிலும் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் மின்வயர்களில் மரங்கள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

