/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிங்கம்புணரி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : பிப் 26, 2025 06:53 AM
சிங்கம்புணரி, பிப். 26--
சிங்கம்புணரி பகுதி சிவன் கோயில்களில் மாசி பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், வழிபாடு செய்யப்பட்டது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில்களிலும், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
*மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற மாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை வலம் வந்தனர். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் விழா நடந்தது.