ADDED : செப் 03, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, செப்.4-சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலை பள்ளியில் யு.பி.எஸ்.சி., கல்வி உதவித்தொகை பெற முதல்நிலை தேர்வு செப்., 6 ல் நடக்கிறது.
அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தேர்வு நடைபெறும். இத்தேர்வினை மாவட்ட அளவில் 182 பேர் எழுத உள்ளனர். இத்தேர்வு எழுத உள்ளோர் தேர்வு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்றி தேர்வுக்கு வரவேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தெரிவித்தார். ///
