UPDATED : செப் 03, 2026 07:00 PM
ADDED : செப் 03, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
கீழடி:கீழடியில் செப். 2 ல் நடந்த கொலையில் ஈடுபட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழடி அருகே இலந்தைகுளத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் கண்ணன் 24, மண் அள்ளும் இயந்திர டிரைவரான இவரை டூவீலர்களில் வந்த கும்பல் பள்ளிச் சந்தை புதுாரில் வெட்டி கொலை செய்தது. கொலை குறித்து கண்ணன் மனைவி முத்துகலா புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் தேடினர்.
கொலை வழக்கு தொடர்பாக மாங்குடி பிரபாகரன் 24, சிவகங்கை கொட்டகுடி மனோஜ் 21, ஐராவதநல்லுார் கஜேந்திரன் 21, புலியூர் பாண்டி முனீஸ்வரன் 18, சிந்தாமணி 17 வயது சிறுவன் , இலந்தைகுளம் முத்துராஜா 30, ஆகிய ஆறு பேரை கீழடி போலீசார் கைது செய்துள்ளனர்.
