/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை மண் எடுத்து காமாட்சி விளக்கு தயாரிப்பு
/
மானாமதுரை மண் எடுத்து காமாட்சி விளக்கு தயாரிப்பு
ADDED : ஆக 26, 2024 05:31 AM

மானாமதுரை:
மானாமதுரையில் மண்ணாலான காமாட்சி விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சீசனுக்கு ஏற்ப மண் பானைகள், சமையல் பாத்திரம், பூஜை பொருட்கள், தோசை சட்டி, அலங்கார பொம்மைகள், கொலு பொம்மைகள், விநாயகர் சிலைகள், சுவாமி சிலைகள் என பல்வேறு விதமான பொருட்களை தரத்தோடும் கலைநயத்தோடும் தயார் செய்து வருகின்றனர்.
இங்கு தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமில்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் விற்பனையாகிறது. வீடுகளில் உள்ள பூஜை அறையில் பெரும்பாலானோர் குத்துவிளக்கிற்கு பதிலாக தங்கம், வெள்ளி, பித்தளை, எவர்சில்வர் போன்றவற்றினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான காமாட்சி விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனை தற்போது மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் மண்ணால் தயார் செய்து தமிழகம் முழுவதும் அனுப்பி வருகின்றனர்.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
மண் காமாட்சி விளக்குகளில் விளக்கேற்றுவதும் ஒரு விசேஷம்தான். ஆகவே பாரம்பரிய முறைப்படி விளக்கேற்ற இந்த மண்ணாலான விளக்குகளை ஏராளமானோர் பயன்படுத்து கின்றனர். இதனால், அதிகளவில் இங்கு காமாட்சி விளக்குகள் தயாரிக்கப்படுகிறது, என்றனர்.

