/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் மழைக்கால நோய் தடுப்பு
/
காரைக்குடியில் மழைக்கால நோய் தடுப்பு
ADDED : செப் 05, 2024 05:15 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாநில, மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது.
அதன் அடிப்படையில் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மேயர் முத்துத்துரை, ஆணையர் சித்ரா, நகர் நல அலுவலர் திவ்யா ஆய்வு செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நகர்நல அலுவலர் திவ்யா கூறுகையில்: மாநகராட்சி முழுவதும் பள்ளிகள் கல்லுாரிகள் வணிக வளாகங்கள் வீடுகள் கடைகளில் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை தடுக்க களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் ஆய்வு நடந்து வருகிறது. மேலும் கடைகள் நீண்ட நாட்களாக பூட்டி இருக்கும் வீடுகள் காலி மனைகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கண்டறியப்பட்டால் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.