ADDED : செப் 11, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காரைக்குடி அருகே ஆம்பக்குடியில் இன்று நடப்பதாக இருந்த மக்கள் தொடர்பு முகாம் நாளை (செப்.,12) நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, காரைக்குடி தாலுகா, மித்ராவயல் அருகே ஆம்பக்குடியில் இன்று (செப்.,11) மக்கள் தொடர்பு முகாம் நடப்பதாக இருந்தது. நிர்வாக காரணத்தால் இந்த முகாம் நாளை (செப்., 12) காலை 10:00 மணிக்கு நடைபெறும். இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் புகார் மனுக்களை வழங்கி தீர்வு பெற்று செல்லலாம், என்றார்.

