ADDED : ஆக 08, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மேலச்சொரிக்குளத்தில் ஆக.,14 காலை 10:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இம்முகாமில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து, அரசு திட்டங்கள் துறை ரீதியாக குறித்து விளக்கம் அளிக்கப்படும். பொதுமக்கள் தரும் மனுக்களுக்கு உடனடி தீர்வு பெற்றுத்தரப்படும். இம்முகாமில் கிராமத்தினர் பங்கேற்று பயன்பெறலாம்.