/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி அருகே பம்ப்செட் திருட்டு
/
இளையான்குடி அருகே பம்ப்செட் திருட்டு
ADDED : ஆக 29, 2024 05:21 AM

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள வயல்களில் இருக்கும் போர்வெல் மோட்டார்களை குறி வைத்து தொடர்ந்து திருட்டு நடக்கிறது.
இளையான்குடி அருகே உள்ள கரும்புக்கூட்டம்,தரிகொம்பன்,வடக்கு கீரனுார்,தெற்கு கீரனுார்,துகவூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் குண்டுமிளகாய்,நெல்,பருத்தி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயிகள் போர்வெல் அமைத்து பம்ப்செட் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்குள் மேற்கண்ட கிராமங்களில் பம்ப்செட்களை குறிவைத்து மர்மகும்பல் ஒன்று திருடி வருகிறது.
இதுவரை 15க்கும் மேற்பட்ட பம்ப் செட், மின்சாதன பொருட்களை திருடப்பட்டதோடு சேதப்படுத்தி செல்வதாக இளையான்குடி போலீசில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: பம்ப்செட்கள் திருடப்படுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் வாடி வருவதால் நஷ்டம் ஏற்படுகிறது. கிராமத்துக்கு சொந்தமான பம்ப்செட்களையும் திருடி செல்வதால் குடிநீரும் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.போலீசார் இந்த திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

