/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டவர் வேகன் ஷெட்டுக்கு தண்டவாளம் அமைக்கும் பணி
/
டவர் வேகன் ஷெட்டுக்கு தண்டவாளம் அமைக்கும் பணி
ADDED : மே 19, 2024 10:08 PM

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்மய பராமரிப்பு ரயிலான டவர் வேகன் நிறுத்தி வைக்க ஷெட் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.
அதனைத் தொடர்ந்து, டவர் வேகனை நிறுத்தி வைக்க தனி தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
நேற்று, காரைக்குடி வழியாக செல்லும் சில ரயில்களின் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டதோடு, பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் முதன்மை பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் ரயில்வே டெக்னீசியன்கள் மற்றும் ஊழியர்கள் தண்டவாளம் அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

