/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை வருகை
/
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை வருகை
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை வருகை
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை வருகை
ADDED : ஏப் 03, 2024 07:23 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வருகை தந்துள்ளனர்.
ஏப்.19 அன்று லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் பிரச்னைக்குரிய கிராமங்கள், தேர்தல் காலங்களில் பிரச்னை ஏற்படும் கிராமங்கள், ஜாதி, மத ரீதியாக பிரச்னைக்குரிய கிராமங்கள், புதிய நபர்கள் குடியேற்றம் என பல்வேறு வகையில் தர வாரியாக போலீசார் கணக்கெடுப்பு நடத்துகின்றனர். போலீசில் தேர்தல் கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டு சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் இப்பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆயிரத்து 357 ஓட்டுச்சாவடிகளில் கடந்த காலங்களில் பணியாற்றிய போலீசாரின் எண்ணிக்கை, தற்போது எத்தனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
பதட்டமான சாவடிகளில் கூடுதலாக எத்தனை போலீசார் பணியில் இருக்க வேண்டும், தற்போது மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் எண்ணிக்கை, தேர்தல் பணிக்கு தேவைப்படும் போலீசாரின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் வாகனங்கள் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க 14 செக் போஸ்ட்களில் வாகன பரிசோதனை நடந்து வருகிறது.
கூடுதல் பாதுகாப்பு பணிக்கு ஒரு கம்பெனி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள் மாவட்டத்தில் தேவையான இடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

