/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைக்கு ஒரே நாளில் 5 வீடுகள் சேதம்
/
மழைக்கு ஒரே நாளில் 5 வீடுகள் சேதம்
ADDED : ஆக 22, 2024 02:45 AM
சிவகங்கை: மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் ஒரே நாளில் 80.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு 5 வீடுகள் பகுதியாக சேதமானது.
மாவட்ட அளவில் ஆடிப்பட்டத்தில் தேடி விதைக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மானாவாரியாக நெல், நிலக்கடலை, பயிறு வகைகள், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை நடவு செய்து வருகின்றனர்.
பெய்து வரும் மழையை நம்பி, வறட்சியில் இருந்த கண்மாய், ஊரணிகள் படிப்படியாக தண்ணீர் தேங்குகிறது. வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்கிவிட்டால், எளிதில் அனைத்து கண்மாய், ஊரணிகள் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் திருப்புவனத்தில் தான் அதிகபட்சமாக ஒரே நாளில் 80.40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு ஒரே நாளில் திருப்புவனத்தில் 90 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. இதற்கு அடுத்து திருப்புத்துாரில் 72.20, சிங்கம்புணரியில் 38.20, சிவகங்கையில் 29 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. இத்தொடர் மழைக்கு நேற்று முன்தினம் மட்டுமே திருப்புத்துாரில் 2, திருப்புவனம், சிவகங்கை, இளையான்குடியில் தலா 1 வீடு வீதம் 5 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.