ADDED : செப் 14, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்ற அறிவியல்கணித செயல்பாடு நடந்தது.
தலைமை ஆசிரியர் ராஜூ தலைமை வகித்தார். வானவில் மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செல்வக்குமார் வரவேற்றார்.
அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகளை வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி செய்து காண்பித்தார்.
கார்டீசியன் மூழ்கி பெர்நுாலிஸ் தத்துவத்தில் பலுான் மோதுதல், வட்டத்தின் பரப்பு காணுதல் செயல்பாடுகளில் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.