/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டம்
ADDED : ஏப் 18, 2024 06:29 AM

சிவகங்கை: ராம நவமியை முன்னிட்டு சிவகங்கை துளசிமகால் பஜனை மடத்தில் கணபதி ஹோமம் சுதர்ஸன ஹோமம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. ராமச்சந்திர மூர்த்திக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. வண்ண மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் ராமபிரான் அலங்கரிக்கப் பட்டு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஏற்பாடுகளை சிவகங்கை பிராமண சமாஜ நிர்வாகிகள் செய்திருந்தனர்
திருப்புத்துார்
நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ராம நவமி உத்ஸவம் நடந்தது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி உத்ஸவம் கொண்டாடப்படும். நேற்று காலை 10:30 மணிக்கு பட்டாச்சார்யார்களால் சிறப்பு நாம கீர்த்தனை மூலவர் ராமர், லெட்சுமணன், சீதை சன்னதியில் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. ராம பஜனையில் பக்தர்கள் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
தேத்தாங்காடு சாலையில் அரிவையூர் தெற்கு வளவு நகரத்தாருக்கு பாத்தியப்பட்ட ராமர் கோவிலில் ராம நவமி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு மூலவரான சீதா, லட்சுமணன், அனுமன் சமேத ராமருக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

