/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராமநாதபுரம் --- தாம்பரத்திற்கு செப்.19 முதல் பகலில் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தல்
/
ராமநாதபுரம் --- தாம்பரத்திற்கு செப்.19 முதல் பகலில் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் --- தாம்பரத்திற்கு செப்.19 முதல் பகலில் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் --- தாம்பரத்திற்கு செப்.19 முதல் பகலில் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க பயணிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 13, 2024 05:15 AM

சிவகங்கை: தாம்பரம் முதல் ராமநாதபுரம் வரை செப்., 19 முதல் இயக்கப்பட உள்ள பகல் நேர ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செப்., 19 அன்று மாலை 5:00 மணிக்கு தாம்பரத்தில் (வண்டி எண்: 06103) புறப்படும்(வியாழன்,சனி,திங்கள்) இந்த ரயில் விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமநாதபுரத்திற்கு மறுநாள் காலை 5:55 மணிக்கு செல்கிறது. அதே போன்று செப்., 20 அன்று காலை 10:55 மணிக்கு ராமநாதபுரத்தில் (வண்டி எண்: 06104) புறப்படும் (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) இந்த ரயில் இதே மார்க்கமாக தாம்பரத்திற்கு இரவு 11:10 மணிக்கு சென்று சேரும்.இச்சிறப்பு ரயில் செப்.,19 முதல் அக்.,1 வரை மட்டுமே சோதனை ஓட்டமாக இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் ஓடுவதன் மூலம் பகலில் மானாமதுரை,சிவகங்கை,காரைக்குடி,புதுக்கோட்டை போன்ற முக்கிய நகரங்களுக்கும்,சென்னை செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பகுதியில் பகல் நேர ரயில் இயக்கப்படாத நிலையில், இந்த ரயில் ஓடுவதன் மூலம் பகல் நேர போக்குவரத்திற்கு உதவியாக இருக்கும். அதே நேரம் இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பயணிக்கு சிலம்பு தரும் தெம்பு
தற்போது செங்கோட்டை- சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு வியாழன், சனி, ஞாயிறும், சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு புதன்,வெள்ளி, சனியன்றும் இயக்கப்படுகின்றன.
இச்சிறப்பு (சிலம்பு எக்ஸ்பிரஸ்) ரயிலில் இரவில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி பகுதிகளை சேர்ந்த பயணிகள் சென்னைக்கு பயணிக்க ஏதுவாக அமைந்துள்ளது.
மானாமதுரை, சிவகங்கையில் நிற்குமா
தாம்பரம் - - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 20683) திங்கள், புதன், வெள்ளியன்றும், மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு (வண்டி எண்: 20684) ஞாயிறு, செவ்வாய், வியாழனன்றும் செல்கிறது. செங்கோட்டையில் இருந்து இந்த ரயில் வரும்போது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நிற்கிறது. அதற்கு பின் மானாமதுரை, சிவகங்கையில் நிறுத்தப்படாமல் காரைக்குடியில் தான் நிற்கிறது. எனவே செங்கோட்டை - தாம்பரம் ரயில் மானாமதுரை, சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னைக்கு பகல் நேர ரயில் அவசியம்
சிவகங்கை டி.புதுார் பயணி டி.ரமேஷ்குமார் கூறியதாவது: மானாமதுரை, சிவகங்கையில் இருந்து சென்னை தலைமை செயலகம், பிற துறைகளுக்கு தினமும் அரசு அலுவலர்கள் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் கூடுதல் ரயில்களை அறிவித்ததை வரவேற்கிறோம்.
அதே நேரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் வராத நாட்களில் இயக்கப்படும் செங்கோட்டை - - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகங்கை, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும். அப்போது தான் சென்னைக்கு தினமும் ரயில் போக்குவரத்து கிடைக்கும்.
அதே போன்று செப்., 19 முதல் பரீச்சார்த்தமாக இயக்க உள்ள ராமநாதபுரம் - தாம்பரம் பகல் நேர ரயிலை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.