/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராமேஸ்வரம் -௸௸- திருச்சி ரயில் ஜன.1 முதல் வேகம் அதிகரிப்பு
/
ராமேஸ்வரம் -௸௸- திருச்சி ரயில் ஜன.1 முதல் வேகம் அதிகரிப்பு
ராமேஸ்வரம் -௸௸- திருச்சி ரயில் ஜன.1 முதல் வேகம் அதிகரிப்பு
ராமேஸ்வரம் -௸௸- திருச்சி ரயில் ஜன.1 முதல் வேகம் அதிகரிப்பு
ADDED : டிச 28, 2024 07:58 AM
சிவகங்கை :  ராமேஸ்வரம் - திருச்சி (வண்டி எண்:16850) ஜன., 1 முதல் முன்பதிவில்லா ரயிலை வேகப்படுத்துகின்றனர். ரயில்வே ஸ்டேஷன்களுக்கு ரயில் வரும் நேரம் மாற்றப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் மதியம் 2:35 மணிக்கு பதில்,ஜன., 1 முதல் இந்த ரயில் மதியம் 2:50க்கு புறப்படும். பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், பரமக்குடி வழியாக மானாமதுரைக்கு மாலை 4:30 மணிக்கு பதில் இனி 4:50 க்கு வந்து சேரும்.
சிவகங்கைக்கு மாலை 5:14 க்கும், கல்லலுக்கு மாலை 5:34 மணி, தேவகோட்டை ரஸ்தாவிற்கு மாலை 5:43 மணி, காரைக்குடிக்கு மாலை 5:58 மணி, கோட்டையூருக்கு மாலை 6:07 மணிக்கு  வந்து சேரும். வழக்கமாக திருச்சிக்கு இரவு 8:10 மணிக்கு செல்லும் இந்த ரயில் ஜன., முதல் இரவு 8:05மணிக்கு சென்று சேரும் விதத்தில் ரயிலின் வேகத்தை அதிகரித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.