/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் ராமநவமி மகோத்ஸவம் ஏப்.16 முதல் 28 வரை நடக்கும்
/
காரைக்குடியில் ராமநவமி மகோத்ஸவம் ஏப்.16 முதல் 28 வரை நடக்கும்
காரைக்குடியில் ராமநவமி மகோத்ஸவம் ஏப்.16 முதல் 28 வரை நடக்கும்
காரைக்குடியில் ராமநவமி மகோத்ஸவம் ஏப்.16 முதல் 28 வரை நடக்கும்
ADDED : ஏப் 11, 2024 06:17 AM
சிவகங்கை : காரைக்குடி கல்லுாரி ரோட்டில் அமைந்துள்ள ராமநவமி மகோத்ஸவ சபாவில் ராமநவமி மகோத்ஸவ விழா ஏப்., 16ல் துவங்குகிறது.
மகோத்ஸவ சபாவில், ஏப்., 16 அன்று காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடைபெறும். ஏப்., 17 ல் ராமநவமியை முன்னிட்டு ராமர் பட ஊர்வலம் செக்காலை சித்திவிநாயகர் கோயிலில் துவங்கும்.காலை 8:00 மணிக்கு ராமர் பட பிரதிஷ்டை நடைபெறும். ஏப்., 17 முதல் 25 வரை ராமாயண உபன்யாஸம் வித்வான் ராம.கிருஷ்ணமூர்த்தி ஆன்மிக உரை ஆற்றுகிறார்.
தினமும் கோசலராமன், சீதாராமன், தசரத ராமன், பாதுகா ராமன், ஜயராமன், ராமநாம ராமன், சுந்தரராமன், சேதுராமன், பட்டாபிராமன் ஆகிய தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
ஏப்., 26 ல் ஆர்.கணேஷ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறும். ஏப்.,27ல் ஆதித்யா ரமேஷ் பாகவதரின் அஷ்டபதி பஜனை, அன்று மாலை 6:30 மணிக்கு திவ்ய நாம பஜனை, ஏப்., 28 அன்று காலை 8:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி, காலை 9:00 மணிக்கு சீதா கல்யாணம், மதியம் 12:30 மணிக்கு ஸமாராதனை, மாலை 6:30 மணிக்கு பவ்வளிம்பு, ஆஞ்சநேய உத்ஸவம் நடைபெறும்.
ராமநவமி மகோத்ஸவகமிட்டியினர் விழா ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

