/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்
/
ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED : மே 07, 2024 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,: தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு பூஜை நடந்தன.
தினமும் காலை, மாலை இருவேளையும் சிறப்பு சேவைகளும் அதனைத் தொடர்ந்து வீதி உலாவும் நடந்தன. ஐந்தாம் நாள் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.
ஒன்பதாம் நாளான நேற்று மாலை ரங்கநாத பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.