/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவ உலகில் சாதனை கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
/
மருத்துவ உலகில் சாதனை கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
ADDED : மே 25, 2024 05:49 AM

சிவகங்கை : மருத்துவம் சார்ந்த அறிவு, அனுபவம் பெற்று செல்லும் நீங்கள், மருத்துவ உலகில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த 7 வது பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் 2018 ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த 100 மாணவர்களுக்கான 7 வது பட்டமளிப்பு விழா நடந்தது. துணை முதல்வர் விசாலாட்சி வரவேற்றார். டீன் சத்தியபாமா தலைமை வகித்தார்.
பட்டங்களை வழங்கி கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது: சிவகங்கை மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முடித்து செல்லும் நீங்கள் இங்கிருந்து மருத்துவம் சார்ந்த அறிவு, அனுபவத்துடன் செல்கிறீர்கள்.
இதன் மூலம் மருத்துவ உலகில் சாதனைகள் படைக்க வேண்டும். உயர்கல்விக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களை உருவாக்கிய இக்கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் கல்லுாரி வளர்ச்சிக்கு பாடுபடுங்கள், என்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் குமாரவேலு, நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபி, தென்றல் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சர்மிளா திலகவதி, சேதுபதி செய்திருந்தனர்.

