/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் குறைப்பு
/
ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் குறைப்பு
ADDED : ஏப் 27, 2024 04:24 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ரேஷன் கடைகளில் கிராமத்தினருக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் குறைவாக வழங்கப்பட்டுள்ளதால் கிராமத்தினர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வழக்கமாக கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 500 கார்டுகளுக்கு அதிகமாக உள்ள பெரிய கடைகளுக்கு தலா 200 லிட்டர் அளவிலும் 500 கார்டுகளுக்கு குறைவாக உள்ள சிறிய கடைகளுக்கு 100 லிட்டர் அளவிலும் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
அதன் மூலம் ம.எண்ணெய் வாங்கும் ஒருவர் உள்ள குடும்ப கார்டுதாரருக்கு தலா 1 லி, அதிகமானோர் உள்ள கார்டுதாரர்களுக்கு 3 லிட்டர் ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வந்தது.
இந்த மாதம் பெரியகடைகளுக்கு 20 லிட்டர் சிறிய கடைகளுக்கு 10 லிட்டர் அளவிலும் ம.எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல கடைகளில் ரேஷன்கார்டுக்கு வழங்க முடியவில்லை.
வட்ட வழங்கல் அலுவலகத்தில் கூறுகையில், 'ஒதுக்கீடு மிகவும் குறைவு. இதனால் வழக்கத்தை விட குறைவாக கடைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.' என்றனர்.

