/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஏப் 28, 2024 06:09 AM
தேவகோட்டை : தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அதிகரித்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றும் பணியை போலீசார் துவக்கினர்.
தேவகோட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தெருக்கள் விசாலமாகவும், போக்குவரத்துக்கு வசதியாகவும் இருந்தது.
தியாகிகள் பூங்கா ஆக்கிரமிப்புக்களால் மறைந்து வருவது பற்றியும், போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது.
நேற்று டி.எஸ்.பி. பார்த்திபன் போலீசாருடன் தியாகிகள் பூங்கா முதல் மெயின் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.
ஐந்து நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் தங்கள் நிறுவனங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையேல் அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

