/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் பிரேமலதா பிரசார மேடை அகற்றம்
/
சிங்கம்புணரியில் பிரேமலதா பிரசார மேடை அகற்றம்
ADDED : ஏப் 12, 2024 10:39 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பிரேமலதா பிரசாரத்தையொட்டி அனுமதி பெறாமல் போடப்பட்டிருந்த மேடை தேர்தல் பார்வையாளர் உத்தரவுப்படி அகற்றப்பட்டது.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸ்க்கு ஆதரவாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று பிரசாரம் செய்ய வந்திருந்தார்.
முன்னதாக அவர் வருகையையொட்டி வேனில் இருந்து பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டது.
ஆனால் சாலைஓரத்தில் கலைநிகழ்ச்சி நடத்தவும், நிர்வாகிகள் அமர்ந்து பேசவும் கட்சியினர் தனியாக மேடை அமைத்திருந்தனர்.
இந்நிலையில் தேர்தல்கமிஷனில் முறையான அனுமதி பெறாமல் மேடை அமைக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து தேர்தல் பறக்கும்படை தாசில்தார் கிருஷ்ணகுமார், அங்கு வந்து மேடையை அகற்றுமாறு கட்சியினரிடம் கூறினார்.
இதற்கு தே.மு.தி.க., மாநில செயற்குழுஉறுப்பினர் தனசேகர் தலைமையில் வந்த அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., அமைச்சர் ஓட்டு கேட்டு வரும்போது தேர்தல் பார்வையாளர்கள் நியாயப்படி நடந்து கொள்ளவில்லை, ஆனால் எங்களிடம் கறாராக இருக்கிறீர்கள் என்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பறக்கும் படையினருடன் வந்த போலீசார் மேடை அருகில் இருந்த ஸ்பீக்கர்களை அகற்றி வேனில் ஏற்றினர். இதைத் தொடர்ந்து கட்சியினரே மேடையை அகற்றிக் கொண்டனர்.

