தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டுகோள்

உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டுகோள்

உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டுகோள்


ADDED : ஆக 01, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளையான்குடி, ஆக.2-

இளையான்குடியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்து புதிய உழவர் அட்டை வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல்வராக ஜெ.இருந்த போது உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் நேரடியாக விவசாய தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் குத்தகை அல்லது விவசாயக் கூலி தொழிலில் ஈடுபடும் விவசாய தொழிலாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உழவர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அடுத்து வந்த அரசுகள் முறையான வழிகாட்டுதல் மற்றும் நடவடிக்கைகள் இல்லாமல் இத்திட்டம் முடங்கிப் உள்ளது. புதிதாக நேரடியாக விவசாய தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் குத்தகை அல்லது விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் புதிய உழவர் அடையாள அட்டை பெற முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரியாண்டிபுரம் விவசாயி தமிழரசன் கூறியதாவது: கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உழவர் அடையாள அட்டை இல்லாததால் அவர்களது குழந்தைகளின் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் திருமண நிலை, மகப்பேறு,விபத்து உள்ளிட்ட காலங்களில் அரசின் எவ்வித நலத்திட்டங்களும் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணங்களும் வாங்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் பரிதவிப்பிற்கு உள்ளாகி வருகிறோம். ஆகவே தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் உழவர் பாதுகாப்பு திட்டத்தை புதிதாக செயல்படுத்தி இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகள், குத்தகை மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து புதிதாக உழவர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us